#BREAKING சேலத்தில் பேரதிர்ச்சி... நகைப்பட்டறையில் 600 கிலோ வெள்ளி கொள்ளை... ஒட்டுமொத்த மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
சேலம் பள்ளப்பட்டி அருகே நள்ளிரவில் வெள்ளி பட்டறையின் கார் ஷெட்டை உடைத்து 600 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் பேரதிர்ச்சி
சேலத்தில் தனியார் ஒருவரின் வெள்ளி பொருள் உற்பத்தி பட்டறையில் நள்ளிரவில் காவலாளியை தாக்கி , 600 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (58). இவர் கடந்த 20வது ஆண்டுகளாக வெள்ளி பொருட்கள் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியில் வெள்ளி பட்டறையும் நடத்தி வருகிறார். இவர் ஆர்டரின் பெயரில் வெள்ளி கொலுசுகள், செயின்கள் உள்ளிட்ட வெள்ளிப்பொருட்கள் செய்து கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பட்டறையில் வேலை செய்து விட்டு இரவு மூடிவிட்டு சென்றனர். வெள்ளிப்பட்டறையின் காவலாளியாக வெங்கடேசன் (60) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் வௌளிப்பட்டறைக்கு 4 பேர் மங்கி குல்லா அணிந்து வந்துள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி வெங்கடேசனை, சத்தம் போடக்கூடாது எனக்கூறி மிரட்டி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து வெள்ளிப்பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளயர்கள் அங்கிருந்த வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து காவலாளி உடனடியாக வௌளிப்பட்டறை உரிமையாளரான பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்பொது கடையில் வைக்கப்பட்டிருந்த வௌளி கொலுசுகள் உள்ளிட்ட 600 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.