×
 

சேலத்தில் நிகழ்ந்த கோர விபத்து... துடிதுடித்து பறிபோன உயிர்கள்... குழந்தை உட்பட 4 பேர் பலி..!!

சேலத்தில் நிகழ்ந்த விபத்தில் குழந்தைக்கு கூட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து , உத்தமசோழபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து எதிர் புற சாலையில் வந்த டெம்போ மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில், குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று , வந்து கொண்டிருந்த நிலையில், உத்தமசோழபுரம் அடுத்துள்ள சூளைமேடு என்ற பகுதியில் நிலைத்தடுமாறி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு , சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் புகுந்தது. அப்போது, சேலம் நெய்காரப்பட்டி பகுதியில் இருந்து கல்பராபட்டி பகுதிக்கு கோவில் திருவிழாவிற்கு 11 பேரை ஏற்றி கொண்டு வந்த டெம்போ வாகனத்தின் மீதும் , அதன் அருகே வந்து இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் டெம்போ வாகனத்தில் பயணித்த ஒரு குழந்தை உள்ளிட்ட இருவரும் , இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் என நான்கு பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் பெயர், ஊர் மற்றும் விவரங்களை கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக கிரேன் மூலமாக வாகனங்களை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் அரசு பேருந்து ஓட்டுனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்து , உத்தமசோழபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share