பெரும் மோதல் ஏற்பட வாய்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பதற்றம்... குவிந்த போலீஸ்....!
சேலத்தில் பேனர் விவகாரத்தில் அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல்நிலை ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால்
திமுக, அதிமுக இரு கட்சியினர் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பு தொண்டர்களும் பெரும் அளவில் குவிந்ததால் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிந்தனர்.
சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகர அதிமுக சார்பில் இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி மற்றும் திமுக அரசின் மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து பேனர் வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என குறிப்பிட்டு அதிமுகவினர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
இதனைத் பார்த்து ஆத்திரமடைந்த திமுகவினர் பேனரை கிழித்துள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர் அங்கு திரண்டு வந்ததால், திமுகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதையும் படிங்க: “இபிஎஸ் தான் முதல்வர் ஆனா...” - NDA கூட்டணிக்குள் குண்டு வைத்த நயினார்... அமைச்சரவைக்கு காத்திருக்கும் ஆப்பு...!
இதனை அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து அங்கு கூடியிருந்த இரு கட்சியினரை கலைய செய்தனர். மேலும், இரு கட்சி நேரடிய மோதல் ஏற்பட வாய்ப்பு இருந்ததால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது இடங்களில் பேனர் வைப்பதற்கான அனுமதி பெற்ற பிறகு வைக்கப்பட வேண்டும் என காவல்துறை சார்பில் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தாறுமாறாக லத்தியால் தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!