"ஐயோ போச்சே"..! மது பாட்டிலை உடைத்த போலீஸ்.? போலீஸ் ஸ்டேஷனில் உருண்டு குடிமகன் தர்ணா..!!
போலீசார் தன்னுடைய மது பாட்டிலை உடைத்ததாக கூறி காவல் நிலையத்தில் குடிமகன் தர்ணா செய்தார்.
சேலத்தில் மதுபாட்டிலை போலீஸார் உடைத்ததாக கூறி ஓமலூர் காவல் நிலையம் முன்பாக குடிமகன் அலப்பறை செய்திருக்கிறார். உடைத்த பாட்டலுக்கு பதிலாக வேறு மதுபான பாட்டில் வாங்கி தர வேண்டும் என கூறி காவல் நிலைய வாசல் முன்பு அமர்ந்து தர்ணா செய்தும் , படுத்து உருண்டும் போராட்டம் நடத்தினார். சேலம் மாவட்டம் ஓமலூரில், போலீஸ்காரர் ஒருவர் தனது மதுபாட்டிலை உடைத்ததாகக் கூறி, போதை ஆசாமி ஒருவர் காவல் நிலையம் முன்பாக மதுபட்டில் வாங்கித்தர கோரி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலி மது பாட்டில் திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக அரசு மதுபான கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள், நேற்று மீண்டும் மதுக் கடையை திறந்தனர். இதனால் நேற்று அனைத்து மதுபான கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில், ஓமலூரை சேர்ந்த கண்ணன் என்பவர், தான் கஷ்டப்பட்டு வாங்கிய மதுபாட்டிலை, போலீஸ்காரர் பிடுங்கி உடைத்துவிட்டதாக கூறி காவல் நிலையத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
தான் விஜய் கட்சியை சேர்ந்தவன் என கூறியப்படி , உடைத்த மது பாட்டிலுக்கான பணத்தை போலீசார் தான் தர வேண்டும் என அடம் பிடித்ததோடு, தான் கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளி , தன் உடல் சோர்வை போக்க மது பாட்டிலை வாங்கினேன் என கூறினார். ஆனால் போலீஸ்காரர் ஒருவர் அதனை பிடுங்கி உடைத்து விட்டார். எனவே அவர்தான் வாங்கித் தர வேண்டும் என காவல் நிலைய முன்பாக அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலப்பறை செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீஸார் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.300 கோடி மோசடி செய்த நபருடன் போட்டோ! வெடித்தது சர்ச்சை! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
அப்போது காவல் நிலைய முன்பாக நீண்டு படுத்து தனது மது பாட்டிலில் உடைத்த போலீஸ்காரர் மீது சாபம் விட்டு விட்டு சென்றார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சோதனைக்கு பதில் சலுகையா? 3 போலீஸ் சஸ்பென்ட்..!! குமரியில் அதிரடி நடவடிக்கை..!!