அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!
சமயபுரம் மாரியம்மன் கோயில் அதிகாரி பணியிடை நீக்கம் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் நடவடிக்கை
திருச்சி மாவட்டம், புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பணியாக இருந்த அதிகாரி ஒருவர், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், பொதுநலன் மற்றும் திருக்கோயில் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பழனிவேல் என்பவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமயபுரம் திருக்கோயிலில் பணியாற்றி வருகிறார். தொடக்க காலத்தில் எழுத்தராகச் (Clerk) சேர்ந்த இவர், துறை சார்ந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, படிப்படியாக உயர்ந்து திருக்கோயில் 'மணியம்' (மணியக்காரர்) பதவியை அடைந்தார்.
இதையும் படிங்க: மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!
பழனிவேல் தனது பதவி மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (DVAC) வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நிலுவையில் உள்ளதால், துறை ரீதியான நடவடிக்கையாக இவர் தற்போது தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாகக் கோயிலில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு மற்றும் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் சமயபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இனிமேல் கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஈரான் பணத்தில் இருந்து இழப்பீடு... டிரம்பின் அதிரடி அறிவிப்பு!