சுடுகாட்டையும் விட்டு வைக்கல! மண்டை ஓடுகள் வெளிய வர அளவுக்கு மண் கொள்ளை! மக்கள் கொந்தளிப்பு...!
கோத்தகிரி பகுதியில் சுடுகாட்டில் மண் அள்ளுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்தியாவில், ஆறுகளில் இருந்து மணல் எடுக்கப்படுவது பரவலாக உள்ளது, ஏனெனில் ஆற்று மணல் கட்டுமானத்திற்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், சட்டவிதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி, குறைந்த செலவில் மணலைப் பெறுவதற்கு மணல் மாஃபியாக்கள் தோன்றியுள்ளன.
மணல் கொள்ளையானது சுற்றுச்சூழல், பொருளாதாரம், மற்றும் சமூகத்தில் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. முதலாவதாக, ஆறுகளில் இருந்து அதிகப்படியான மணல் அகழ்வு, ஆற்று படுகைகளின் கட்டமைப்பை மாற்றி, ஆற்றின் இயற்கையான ஓட்டத்தை பாதிக்கிறது. இது ஆற்று அரிப்பு, கரையோரப் பகுதிகளின் அழிவு, மற்றும் வெள்ளப் பாதிப்புகளை அதிகரிக்கிறது. கடற்கரைகளில் மணல் அகழ்வு, கரையோர அரிப்பை ஏற்படுத்தி, கடல் மட்ட உயர்வு மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கு எதிரான இயற்கையான பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்துகிறது. நீலகிரியில் சுடுகாட்டில் மண் கொள்ளை நடந்திருப்பதாக எழுந்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சுடுகாடு பகுதியில் இரவோடு இரவாக மண் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மனித எலும்புகள், மண்டை ஓடு வெளியே தெரியும் அளவிற்கு கவுன்சிலர் மண் அள்ளியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு கவுன்சிலர் கணபதி சுடுகாட்டில் மண் அள்ளியதாக புகார் தெரிவித்து, கவுன்சிலர் மீது தக்க
இதையும் படிங்க: ஊட்டி போறீங்களா..?? அப்போ உங்களுக்காகதான்..!! அடுத்த 5 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!
நடவடிக்கை எடுக்க கோரி, நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையாளர் கூறிய நிலையில், மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த மேயர் பிரியா...!