அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள்..! சந்தீப் ராய் ரத்தோருக்கு புது பொறுப்பு... சிறைத்துறை டிஜிபியாக நியமனம்..!!
சிறைத்துறை டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சந்தீப் ராய் ரத்தோர் என்பவர் தமிழ்நாடு காவல் துறையில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வரும் 1992-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. டெல்லியில் பிறந்த இவர், தமிழ்நாடு கேடரில் சேர்ந்து நீண்டகாலமாக அரசுப் பணியில் சிறப்பான சாதனைகளைப் படைத்து வருகிறார். அவரது பணி வாழ்க்கை காவல் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, உளவுப் பணி மற்றும் நகர்ப்புற காவல் போன்ற பல்வேறு துறைகளில் விரிவான அனுபவத்தை உள்ளடக்கியது.
தனது ஐபிஎஸ் பயிற்சிக்குப் பிறகு திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிய ரத்தோர், அடிப்படை நிலையில் இருந்து தனது திறமையை நிரூபித்தார். சென்னையில் போக்குவரத்து துணை ஆணையராக இருந்தபோது எல்.ஈ.டி. டிராஃபிக் சிக்னல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் நகரப் போக்குவரத்தை மேம்படுத்தினார். 2001-2002-ம் ஆண்டுகளில் உலக அமைதிப் படையில் பங்கேற்று பதக்கம் பெற்றார்.
2010-ம் ஆண்டில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஐஜியாகவும், 2016-17-ல் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும ஐஜியாகவும் பணியாற்றினார். 2017 முதல் 2019 வரை சிறப்பு அதிரடிப் படையின் தலைவராக நக்சல்பாரி பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக இருந்தபோது இளைஞர்களிடையே காவல் 2021-ல் ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரத்தோர், 2023-ல் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பாணி தான் சரி! ஆக்ஷனில் இறங்கிய விஜய்!! அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தவெக திட்டம்!
இந்தப் பொறுப்பில் நகரின் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல சவால்களை எதிர்கொண்டார். பின்னர் காவல் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாகப் பணியாற்றிய அவர், 2026 ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: கருணாநிதி காலத்து பழக்கம்!! நோ சொன்ன ஸ்டாலின்! சட்டசபை தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றம்!