×
 

அதிகாலையிலேயே அதிர்ச்சி! எங்க அம்மா விட்டுட்டு போய்ட்டாங்க… கதறி துடிக்கும் குழந்தைகள்..!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகள் தாயை இழந்து கதறி அழும் காட்சிகள் மனதை கனக்கச் செய்கிறது.

கண்ணகி நகர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயை விழுந்த குழந்தைகள் கதறி துடிக்கும் காட்சிகள் காண்போரை கலங்கச் செய்கிறது. 

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த வரலட்சுமி (30) என்பவர் கனமழை காரணமாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தற்போது சாலையில் மின்சார கம்பி ஒன்று அறுந்து விழுந்து உள்ளதை கவனிக்காமல் பணியை மேற்கொண்டுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பணிக்குச் சென்ற வரலட்சுமி காலை உணவு அருந்த வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் கண்ணகி நகர் பகுதிக்குச் சென்று பார்த்த போது அவர் சாலையில் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: பெருந்துயரம்... மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் பலி! நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள்..!

இதை அடுத்து 193 வது மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வரலட்சுமி உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாயை இழந்த வரலட்சுமி குழந்தைகள், எங்க அம்மா போயிட்டாங்க என்ன கதறி அழும் காட்சிகள் மனதை கனக்கச் செய்கிறது. கண்ணகி நகர் பகுதியில் மூன்று மாதங்களுக்கு மேலாக மின்வடங்களை புதைக்காதது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மின்சார ஊழியர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, வரலட்சுமியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வரலட்சுமிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவரது கணவர் வேலைக்குச் செல்லாமல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. அவர்களுக்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்! ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share