தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!
அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் கூறியது என்ன என்பது குறித்து உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம் அளித்தார்.
சென்னை ரிப்பன் மாளிகை வெளியே ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தீவிரமடைந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினசரி ஊதியம் ரூ.832 என்ற அளவை செயல்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன் திரண்டனர். தற்போது அவர்கள் பெறும் தினக்கூலி சுமார் ரூ.751 முதல் ரூ.762 வரை உள்ளது.
இதை உயர்த்தி, மாத ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான கோரிக்கை. பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியாக அளித்த இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையில் அடங்கியுள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் என்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன என்பது குறித்து உழைப்போர் உரிமை இயக்க மாநில செயலாளர் பாரதி விளக்கம் கொடுத்தார். அவர் கூறுகையில், உணவுப்படி ரூ.50 அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவித்தனர். 200 வார்டுகளில் கூடிய விரைவில் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தருவோம் என உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 15 நாட்களாக காத்திருப்பு... உறுதியளித்த அமைச்சர்கள்..!! தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்..!!
தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை முழுமையாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். புதிதாக தூய்மைப் பணியாளர்களுக்கு 300 வாகனங்கள் வழங்கப்படும் என்றும், முதற்கட்டமாக 160 வாகனங்கள் வழங்கப்படும் என்று கூறினர். 2 மாதங்களுக்கு ஒருமுறை தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வருக்கு தூக்கமே இல்ல..! குறைகள் தீர்க்கப்படும்.. அமைச்சர் ஆதவ் உறுதி..!!