நாங்க என்ன கஞ்சா, சாராயம் விக்குறவங்களா? கொளுத்தினு சாவோம்! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்..!
நாங்கள் உழைப்பாளிகள்., எங்களுக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தினர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 13 வது நாளாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடி வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக போராடுகிறார்கள் எனக் கூறி தொடர்ந்த வழக்கில் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற உத்தரவிட்டது.
இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். கலைந்து செல்லவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறி காவல்துறையினர் எச்சரித்தனர்.
ஆனால், நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
நீங்கள் சுதந்திர தினத்துக்கு சுதந்திரமாக கொடி ஏற்ற வேண்டும் என்பதற்காக எங்களை அப்புறப்படுத்த நினைத்தாலும் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாங்க என்ன எதிரியா? போலி பிம்பத்தை கட்டமைக்குறாங்க! ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்…
நாங்கள் என்ன சாராயம் விற்பவர்களா, கஞ்சா விற்பவர்களா என்ன கேள்வி எழுப்பிய தூய்மை பணியாளர்கள், நாங்கள் உழைப்பாளி என்றும் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்ததற்காக போராடுகிறோம் என தெரிவித்தனர். இந்த நிலையில், எட்டாவது கட்டமாக தூய்மை பணியாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால், 10 பெண்கள் இந்த இடத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்போம் என்று எச்சரித்தனர்.
உங்கள் வீட்டுப் பெண்களாக இருந்தால்., உங்கள் அக்கா தங்கைகளாக இருந்தால் இப்படி ரோட்டில் உட்கார விடுவீர்களா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஓட்டு கேட்கும் போது பெண்கள்., பெண்கள் என்று ஓட்டு கேட்டீர்களே இப்போது எங்கே போனது பெண்கள் வேண்டும் என்ற எண்ணம் என கேள்வி எழுப்பினர்.
ஓட்டு கேட்டு வந்த சேகர்பாபு எங்களுக்கு எதுவும் செய்யவில்லை., நூறு வருஷம் ஆனாலும் அந்த பக்கம் நீங்கள் திரும்பியே பார்க்க முடியாது என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: PLEASE வேலைக்கு வாங்க! போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு..!