×
 

சசிகலாவால் வந்த புது சிக்கல்... எக்குத்தப்பாய் சின்னம்மாவிடம் சிக்கிய எடப்பாடி... தலைகீழாய் மாறிய அதிமுக கணக்கு...!!

ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு திமுகவில் சேரலாமா அல்லது சசிகலா கட்சியுடன் இணையலாமா என கடுமையாக யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் சசிகலாவின் புதுக்கட்சி எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

தமிழக அரசியலில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பு தற்போது  வெளியாகி உள்ளது. அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான வி.கே.சசிகலா தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்துள்ளார். கட்சியின் பெயர் பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவித்த சசிகலா, கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதில் கருப்பு,வெள்ளை , சிவப்பு வண்ணமும் நடுவில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சசிகலா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

மேலும் தான் பெங்களூர் சிறையில் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி தனக்கு எந்த அளவுக்கு நெருக்கடிகள் கொடுத்தார் என்றும் ஒன்பது ஆண்டுகளாக சொல்லாத விஷயங்கள் என கூறி பல விவரங்களை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயலலிதா படத்தின்முன் அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் சத்தியம் வாங்கினேன். சத்தியம் வாங்கியபின் இபிஎஸ்-ஐ முதல்வராக்க கடிதம் கொடுத்தேன் . இப்போ இருக்குறாரு இல்லையா இவரை முதலமைச்சரா தேர்ந்தெடுத்தோம். நான் பேரை சொல்ல கூட விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி தன்னை மாற்றிக்கொள்வார் என 9 ஆண்டு காலம் காத்திருந்தேன். கட்சி என்னவானாலும் பரவாயில்லை என தன்னை பற்றி மட்டுமே நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. 9 வருடங்கள் இருந்தது போல் இனிமேலும் நான் மவுனமாக இருந்தால், அது தமிழக மக்களுக்கு இழைக்கும் துரோகமாக அமைந்துவிடும். எனவே, தமிழக மக்களுக்காக, கழக தொண்டர்களுக்காக புதிய கட்சியை ஆரம்பிக்க போகிறோம். இது திராவிட கட்சியாக இருக்கும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், ஏழை எளிய சாமானிய மக்களின் கட்சியாக இது செயல்படும் என அறிவித்தார். 

எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கேட்டு ஏற்கனவே அதிமுக தொண்டர்களும், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளான நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நிலையில் திமுகவை அழிப்பதற்காக அல்ல அதிமுகவை பழிவாங்கவே சசிகலா புதிய கட்சி தொடங்கியதாக கிளம்பியுள்ள அரசியல் விமர்சகர்களின் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: சசிகலாவுக்கே சவாலா?... சின்னம்மாவை ‘சீப்போடு’ ஒப்பிட்ட டிடிவி தினகரன்... அதிமுகவுடன் இணைந்த ஜோரில் நக்கல்...!

எடப்பாடி பழனிச்சாமி மீதும் அவரை அண்ணன் என கூறி அவருடன் கூட்டணி வைத்த சகோதரி மகன் டிடிவி தினகரன் மீதும் கடும் கோபத்தில் இருந்த சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியிடம் இந்த தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய தயார் என சொன்னபோதும் சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்ள எடப்பாடி சம்மதிக்கவில்லை. மறுபுறம் தினகரனும் இவர் பேச்சை கேட்கவில்லை. எனவே புதுக்கட்சி தொடங்கி டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடுமையான நெருக்கடிகளை தர பல்வேறு வியூகங்களை சசிகலா வகுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு திமுகவில் சேரலாமா அல்லது சசிகலா கட்சியுடன் இணையலாமா என கடுமையாக யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் சசிகலாவின் புதுக்கட்சி எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

இதையும் படிங்க: WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share