#BREAKING : தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு... 9 பேருக்கும் தூக்கு தண்டனை...! பேனா நுனியை முறித்த நீதிபதி..!!
சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. நீதிபதி முத்துக்குமரன் கடந்த மாதம் 23ந்தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானிப்பதாக தெரிவித்ததோடு குற்றம்சாட்டப்பட்ட 9 பேரின் உடல்நிலை, மன நிலை குறித்தான அறிக்கை மற்றும் சம்பள கணக்கு மற்றும் சொத்து விவரங்களையும் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை அதிகாரிகள் 9பேரின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!
இதையடுத்து் கடந்த விசாரணையின் போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டணை விபரங்களை தெரிக்க வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சாத்தாங்குளம் வழக்கில் தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார். ஒன்பது பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிதினும் அரிதான குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் குற்றவாளிகளுக்கு அபராதமும் பிடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது என்றும் சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும்., ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்
காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது என்றும் குறிப்பிட்டார். குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். சாகும் வரை மரண தண்டனை மற்றும் இரட்டை மரண தண்டனை என்றும் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளது. 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் பேனாவின் முள் நுனியை உடைத்தார் நீதிபதி முத்துக்குமரன்.
இதையும் படிங்க: கோவையில் திமுக செய்யும் தில்லாலங்கடி!! அண்ணாமலை பகீர்!! அமாவாசை காலத்து டெக்னிக் என விளாசல்!