வார்த்தையை அளந்து பேசுங்க சாட்டை... தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த தவெக நிர்வாகிகள்...!
யூடியூபரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன் மீது தமிழக வெற்றிக் கழகத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை 2024-இல் தொடங்கியபோது, சீமான் ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இருப்பினும், 2024 அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் தனது கொள்கைகளாக திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, சீமானின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. இந்தக் கொள்கை அறிவிப்பு, சீமானின் கடுமையான விமர்சனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
சீமான், சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில், விஜய்யின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றாக முடியாது. நோயும் மருந்தும் ஒன்றாக முடியுமா? வில்லனும் ஹீரோவும் ஒரே ஆளாக இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய சீமான், விஜய்யின் கொள்கைகளை நடுநிலை அல்ல, கொடுநிலை என்று கடுமையாகச் சாடினார். மேலும், விஜய் இனி தான் அம்பேத்கர், பெரியார் குறித்து படிக்க வேண்டும். நான் அதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவன் என்று கூறி, தனது அரசியல் அனுபவத்தையும் கொள்கைத் தெளிவையும் முன்னிலைப்படுத்தினார்.
சீமான் விஜயை விமர்சித்து வரும் அதே வேளையில் சீமானின் கட்சி நிர்வாகிகளும் தமிழக வெற்றி கழகத்தை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக சாட்டை துரைமுருகன் விஜயையும் அவரது கட்சி செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். விஜய்க்கு வரும் கூட்டம் தற்குறி கூட்டம் என சாட்டை துரைமுருகன் விமர்சித்து இருந்தார். விஜயை பார்த்து விட்டோம் என்றும் பார்க்கவில்லை என்றும் பெண்கள் அழுவதாக பெண்கள் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ச்சீ... எவ்ளோ வன்மம்! தம்பி பாலா அண்ணன் நான் இருக்கேன்! ஆதரவு குரல் கொடுத்த சீமான்...!
விஜயை தரக்குறைப்பாக பேசி விமர்சித்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கப் சிப்-னு இருக்கணும்… வழக்கு பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது… சீமான், விஜயலட்சுமிக்கு தடை…!