ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....!
திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பள்ளி திறப்பு தேதியில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்வரும் கல்வியாண்டிற்காக ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையில், நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேசமயம், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்தந்த துறைகள் சார்ந்த முக்கிய கோரிக்கைகள், கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்கள், மக்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அமைச்சர்களிடம் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிப் போட வேண்டிய சூழல் உருவாகுமா என்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சருடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!
குறிப்பாக, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, திட்டமிட்டப்படி பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு! 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலர்ந்தது காங்., ஆட்சி!