பள்ளி வளாகத்தில் இப்படியா?... சீருடையுடன் மாணவர்கள் செய்த காரியம்... தீயாய் பரவும் வீடியோ...!
அரசு பள்ளி மாணவர்கள் பற்றி சீருடையில் ரீல்ஸ் செய்த வீடியோ வைரல்
கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி சீருடை உடன் மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ. பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ வைரல். பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்திட வேண்டும் என எதிர்பார்ப்பு.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்கள் பள்ளிச் சீருடையில் வீடியோ எடுத்து பதிவிட்ட ரீல்ஸ் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்தில் வகுப்பறைகளில் முன்பாக நின்றவாறு மாணவர்கள் வீடியோ எடுத்து பல்வேறு பின்னணி இசை சேர்த்து ரிலீஸ் பதிவிட்டுள்ளனர். முதல் மாடியில் இருந்து படிக்கட்டுகளில் கும்பலாக இறங்கி வருவது போன்ற வீடியோ எடுத்தும் அதனை ரீல்சாக பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி குழந்தைகளை கால் அமுக்கச் சொன்ன ஆசிரியர்… வைரல் வீடியோவால் சிக்கிய சம்பவம்!
பள்ளிச் சீருடையுடன் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பதிவிட்டுள்ள இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: டிக் டாக்: தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை.. அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டம்..!