×
 

விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை... இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

இன்று இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அந்தந்த மாவட்டங்களின் மழை நிலவரத்தை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வடதமிழக - புதுவை - தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, வடக்கு - வட மேற்கு இன்று நகர்ந்து செல்லக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக இன்று இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING அடித்து வெளுக்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று (23.10.2025) விடுமுறை அளிக்கப்படுவதாகவும்,  இதனை ஈடு செய்யும் விதமாக 15.11.2025 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுவதாகவும் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி சிக்கல்... ரூ.2,000 கோடி ஊழலை தோண்டி எடுக்க ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்துறை...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share