இந்த 3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! காரணம் இதுதான்..!!
புதுக்கோட்டை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் நாளை (ஜனவரி 28) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் புகழ்பெற்ற கோவில் திருவிழாக்களை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படுகின்றன. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி மாதத்தில் சில நாட்கள் வழக்கமான பணி நாட்களாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அருணா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். விடுமுறையை ஈடுகட்டும் வகையில், பிப்ரவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் நாளைக்கு ஸ்கூல் இருக்கா..? இல்லையா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!
ஆண்டுதோறும் இந்த திருவிழா பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் தமிழகத்தின் முக்கிய வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் நோக்கில், பிப்ரவரி 7-ஆம் தேதி வழக்கமான வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கல்வி நாட்களில் எவ்வித குறையும் ஏற்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் நாளை திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. ‘தென் திருப்பதி’ என பக்தர்களால் அழைக்கப்படும் இத்தலம், கரூர் - திண்டுக்கல் சாலையில் குஜிலியம்பாறை அருகே சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இதை முன்னிட்டு கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அன்றைய தினம் அரசு தேர்வுகள் ஏதேனும் நடைபெற்றால், அத்தேர்வுகளுடன் தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த உள்ளூர் விடுமுறைகள் பக்தர்களின் வசதிக்காகவும், கோவில் நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்கவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
இதையும் படிங்க: உ.பி: குளிரில் நடுநடுங்கும் மக்கள்..!! பள்ளிகளுக்கு ஜன.1ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு..!!