×
 

ஐயா எங்களுக்காகவும் குரல் கொடுங்க... சீமானிடம் கதறி அழுத தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்தினர்!

உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினர். இந்த நிலையில், மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி என்பவர் உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த வரலட்சுமி என்பவர் கனமழை காரணமாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தற்போது சாலையில் மின்சார கம்பி ஒன்று அறுந்து விழுந்து உள்ளதை கவனிக்காமல் பணியை மேற்கொண்டுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பணிக்குச் சென்ற வரலட்சுமி காலை உணவு அருந்த வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் கண்ணகி நகர் பகுதிக்குச் சென்று பார்த்த போது அவர் சாலையில் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

வரலட்சுமிக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று வரலட்சுமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி 20 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். வரலட்சுமி குழந்தைகளின் செலவை அரசே ஏற்கும் என்றும், அவரது கணவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய மசோதாவிற்கு ஆதரவு... தப்பு பண்ணா தண்டனை கிடைக்கணும்... சீமான் திட்டவட்டம்..!

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தங்களுக்காக குரல் கொடுக்குமாறு வரலட்சுமியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். அவர்கள் கதறி அழுவதைக் கண்டு சீமானும் கண் கலங்கினார்.

இதையும் படிங்க: “யாரை பார்த்து அணில்-ன்னு சொன்ன” - மதுரை மாநாட்டில் சீமானை சிதறவிட்ட தவெக தொண்டர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share