தமிழ் மண்ணுக்கும் இனத்துக்கும் பெருமை... கபடிப்போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு சீமான் வாழ்த்து...!
கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று சாதாரண திறமையில் மிளிரும் தமிழக மாணவர்களுக்கு சீமான் வாழ்ந்த தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய விளையாட்டான கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் (Asian Youth Games 2025) கபடி போட்டியில், இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளன. இந்த இரட்டைத் தங்க வெற்றி, இந்தியாவின் இளம் வீரர்களின் திறமையையும், அணியின் ஒற்றுமையையும் உலக அரங்கில் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டிகள், பஹ்ரைனின் ரிஃபா நகரில் உள்ள இஸா ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கில் நடைபெற்றன.அங்கு இந்திய வீரர்கள் ஆதிக்கத்தைப் பிரதிபலித்தனர்.ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், 14 முதல் 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான முக்கியமான சர்வதேச நிகழ்வாகும்.
மேலும் 222 இந்திய வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கபடி போட்டிகள் அக்டோபர் 23 அன்று தொடங்கி, 31 வரை நீடிக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இரண்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் வென்றுள்ளது.
இதையும் படிங்க: சுழற்றி அடிக்கப் போகுது மழை... உஷார் மக்களே! 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!
தமிழகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் அதில் இடம் பெற்றுவுள்ளனர். பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025இல் தமிழ்நாட்டின் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவின் சிறப்பான பங்களிப்புடன் இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ள செய்தி மிகுந்த பெருமிதமளிக்கிறது என சீமான் கூறியுள்ளார். அதேபோன்று தமிழ்நாட்டைச்சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் இடம் பெற்றிருந்த இந்திய ஆடவர் கபடி அணியும் தங்கம் வென்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச்சேர்ந்த இளம்பிள்ளைகள் தங்கள் தனித்திறனை வளர்த்து, தம்முடைய கடுமையான பயிற்சினாலும், அயராத முயற்சியினாலும் அடுத்தடுத்து சாதனைகள் புரிவது, தமிழ் மண்ணிற்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்று பெரு நிகழ்வு என்றும் அன்பு பிள்ளைகள் இருவரும் கபடி போட்டியில் தங்கள் பங்களிப்பை சிறப்புற தந்து பதக்கங்கள் பல வென்று மென்மேலும் சாதனை படைக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் எனவும் சீமான் தெரிவித்தார்
இதையும் படிங்க: மிகப்பெரிய முழு மின்சார நதி சரக்கு கப்பல்..!! LAUNCH செய்த சீனா..!!
 by
 by
                                    