×
 

குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

சிறுமி கொலை விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல., அது சுடுகாடு என்றார். தொடரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறி என்று கூறியுள்ள சீமான், ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: மருத்துவத்தில் தனியார் மயமா? வெட்கக்கேடு... தமிழக அரசை வறுத்தெடுத்த சீமான்..!

எவ்விதக் கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருபோதும் பலியாகக்கூடாது என்றும் கூறினார். குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share