பெண்களுக்கு பாதுகாப்பில்ல... அவன பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்..!! சீமானிடம் முறையிட்ட பெண்கள்..!!
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுமாறு சீமானிடம் முறையிடப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதி செய்துள்ளது. இதற்காக, பிப்ரவரி 21 அன்று திருச்சி அருகே ஆலம்பட்டிப்புதூரில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்.
இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் என சம அளவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சீமான் தானே சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். 234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து சீமான் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
திருத்தணியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய சீமான் ஒவ்வொரு தகுதியிலும் நாம் தமிழர் கட்சியை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது சீமானிடம் பெண்கள் முறையிட்டனர். பெண்கள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகள் வன்புணர்வு செய்யப்படுவது குறித்தும் பேசுமாறு வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: குடிப்பவர்கள் வாக்கு எங்களுக்கு வேண்டாம்.. குடிமக்களின் வாக்குதான் தேவை..!! சீமான் தெறி ஸ்பீச்..!!
நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் என்றும் எங்கள் வீட்டில் பெண் பிள்ளை இருக்கிறது அரை மணி நேரம் தாமதம் ஆனாலும் அவர்கள் வருவதற்குள் பயம்தான் வருகிறது எனவும் கூறினர். வன்புணர்வு போன்று சம்பவங்களில் ஈடுபடுபவர்களை சுடக்கூடாது என்றும் பெற்றோர் ஊத்தி கொளுத்த வேண்டும் என்றும் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். அண்ணன் ஆட்சியில் நீங்கள் சொல்வது போலவே செய்யலாம் என்று சீமான் அவர்களை அமைதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: அமைச்சர்களை ஜெயிக்க வைக்க டீலிங்... அதிமுக தொகுதி ஒதுக்கீட்டை விமர்சித்த சீமான்..!!