×
 

பாக். தாக்குதலுக்கு துடித்தவர்கள் இலங்கை தாக்குதலுக்கு கள்ள மௌனம் காப்பது ஏன்? சீமான் சரமாரி கேள்வி..!

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள், இலங்கை தாக்குதலுக்கு கள்ள அமைதி காப்பது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆனந்த், முரளி, சாமிநாதன், வெற்றிவேல் அன்பரசன் ஆகிய 5 மீனவச்சொந்தங்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது இனிய பிறந்தநாள் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் தொடர் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. புதிதாக இலங்கை கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பது தமிழ் மீனவ மக்களுக்கு இன்னுமொரு பேரிடியாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

கடந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவிட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கே மாயமாய் மறைந்தார்கள்? இலங்கை கடற்படைக்கு, தன் எல்லைக்குள் உலவும் கடற்கொள்ளையர்களைப் பிடிக்க திறனில்லையா? அல்லது கடற்கொள்ளையர்களாக வந்தவர்களே இலங்கை கடற்படையினர்தானா என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி இந்திய நாட்டு குடிகள் மீது தாக்குதல் நடத்தியவுடன் பதறி துடித்த பெருமக்கள், இலங்கை கடற்கொள்ளையர்கள் எல்லை தாண்டி தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு எந்த பதற்றமும் கொள்ளாமல் கள்ள அமைதி காப்பது ஏன்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லையா? அல்லது உயிரிழப்புகள் நிகழ்ந்தால்தான் அதுபற்றி பேசுவீர்களா? என கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: வீட்டில் கூட வாழ முடியல; இதான் உங்க திராவிட மாடலா? கடுப்பில் கழுவி ஊற்றிய சீமான்!!

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் தமிழ் மீனவர்களைக் காக்க இனியேனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட ஐந்து மீனவச்சொந்தங்களுக்கும் உரிய மருத்துவம், துயர்துடைப்பு உதவிகளைச் செய்துதர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்

இதையும் படிங்க: தொடரும் கொலைகள்..! இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத அரசா? வரிந்து கட்டிய சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share