×
 

சீமான் மீதான வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

சென்னையின் தரமணி பகுதியில் ஏப்ரல் 2018-இல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் சீமான். நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டம், இது வெறும் நினைவு நிகழ்வாக மட்டுமல்லாமல், தற்போதைய சமூக பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ளும் மேடையாக மாறியது.

சுமார் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டம், தமிழ் அடையாளத்தின் பல பரிமாணங்களை வரலாற்று, சுற்றுச்சூழல், அரசியல் ஒருங்கிணைத்தது. சீமானின் பேச்சு, இந்தக் கூட்டத்தின் உச்சமாக இருந்தது, அது அவரது அரசியல் பார்வையின் சாரத்தை வெளிப்படுத்தியது. அறிவியல் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு எதிரான விமர்சனம். நியூட்ரினோ கண்டுபிடிப்பு திட்டம் (India-based Neutrino Observatory - INO), தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைக்கப்படும் என்பதால், சுற்றுச்சூழல் அழிப்பு ஏற்படும் என்று சீமான் வாதிட்டார்.

இது, மலைகளின் சமநிலையைத் தொந்தரவு செய்யும் என்றும், உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல், சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் (சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 277 கி.மீ. நீளமுள்ள பசுமை வழிச்சாலை) விவசாய நிலங்களை அழிக்கும், விவசாயிகளின் வாழ்க்கையை அச்சுறுத்தும் என்று விமர்சித்தார். சீமானின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி காவல் துணை ஆய்வாளா் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுங்கள்... கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு...!

இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலவையில் இருந்து வந்தது. இதனை ரத்து செய்யக்கோாி சீமான்  முறையிட்டார். இதனை அடுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க: லடாக்கில் நடந்த வன்முறைக்கு இவர்தான் காரணம்.. சோனம் வாங்சுக்கை கைது செய்த போலீஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share