×
 

அண்ணாமலை தனி ஆளில்ல!! தமிழ் தேசியத்தின் மகன்!! தாக்கரே சகோதரர்கள் மிரட்டலுக்கு சீமான் பதிலடி!!

கட்சி, அரசியல், கொள்கை என எல்லாம் கடந்து தமிழ் இனத்தின் மகனாக, நாம் அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது எழுந்த சர்ச்சை தொடர்பாக நாம் தமிழர் கட்சி (நா.த.க.) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக பிரசாரம் செய்த பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை, "மும்பை மராத்தியர்களின் நகரம் மட்டுமல்ல, பன்னாட்டு நகரம்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ் தாக்கரே, அண்ணாமலையை "ரசமலாய்" என்று கிண்டலாக அழைத்ததுடன், "மும்பைக்கு வந்தால் கால்களை வெட்டுவேன்" என்று வன்முறை தோய்ந்த வார்த்தைகளில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்ன பாத்தா அரசுக்கு பயமா? போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் உங்க மாடலா... கிழித்து தொங்கவிட்ட சீமான்..!

இந்த வன்முறை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மண்ணின் மைந்தர்கள் மண்ணை ஆள வேண்டும்" என்ற கொள்கையை முன்வைத்து மகாராஷ்டிரா மாநில உரிமைக்காக சிவசேனாவும், எம்.என்.எஸ்.உம் போராடுவது முற்றிலும் சரியானது. அதேபோல் இந்தி திணிப்புக்கு எதிரான அவர்களின் தாய்மொழி கொள்கையும் சரியே. தேசிய இன உரிமைக்காக போராடும் அனைத்து தேசிய இனங்களின் கருத்துகளுடனும் நாங்கள் உடன்படுகிறோம்.

ஆனால், அண்ணாமலையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதை ஏற்பதும் எதிர்ப்பதும் ஜனநாயக உரிமை. எனினும், "மும்பைக்கு வந்தால் கால்களை வெட்டுவேன்" போன்ற வன்முறை பேச்சு மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது.

அண்ணாமலையின் கருத்தியல், கொள்கை, அரசியல் நிலைப்பாடுகளில் நாங்கள் முற்றிலும் முரண்படுகிறோம். ஆனால், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் வன்முறை மிரட்டல் விடுப்பது ஏற்புடையதல்ல.

ராஜ் தாக்கரேயின் இந்தப் பேச்சு அண்ணாமலை என்ற தனிநபரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

மக்களை வழிநடத்தும் தலைவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசக் கூடாது. அண்ணாமலை ஒரு தனிநபர் மட்டுமல்ல; முதலில் அவர் தமிழ்த் தேசிய இனத்தின் மகன். கட்சி, அரசியல், கொள்கை எல்லாவற்றையும் கடந்து, தமிழ் இனத்தின் மகனாக அண்ணாமலைக்கு நாங்கள் துணை நிற்போம்.

ராஜ் தாக்கரேயின் வன்முறை பேச்சுக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்..! டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஆஸ்கர் பெறும்... சீமான் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share