×
 

ஸ்டாலின், இபிஎஸ் காரையும் செக் பண்ணுங்க! தேர்தல் அதிகாரிகளுடன் சீமான் வாக்குவாதம்!

காரைக்குடி செக்போஸ்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரில் சோதனை செய்த பெண் அதிகாரியிடம் ஆவேசமாகபேசிய சீமான்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் வாகனம் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பலத்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. காரைக்குடி கண்டனூர் செக்போஸ்டில் (Checkpost) சீமான் வந்த காரைத் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஏற்கனவே நேற்று கன்னியாகுமரியில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வாகனம் சோதனையிடப்பட்ட நிலையில், இன்று சீமானின் வாகனம் சோதனையிடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகளுடன் மோதல்: தேர்தல் பறக்கும் படைப் பெண் அதிகாரி சுப்புலட்சுமி தலைமையிலான குழுவினர் சீமானின் காரைச் சோதனையிட முயன்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய சீமான், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: குடிப்பவர்கள் வாக்கு எங்களுக்கு வேண்டாம்.. குடிமக்களின் வாக்குதான் தேவை..!! சீமான் தெறி ஸ்பீச்..!!

எங்கள் காரை மட்டும் ஏன் எப்போதும் சோதனையிடுகிறீர்கள்? இதேபோல் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் கார்களையும் முறையாகச் சோதனை செய்ய வேண்டும் என்று சீமான் ஆவேசமாக முழக்கமிட்டார்.

ஏற்கனவே திமுக வேட்பாளர் பட்டியலை 'வாரிசு அரசியல்' என விமர்சித்திருந்த சீமான், தேர்தல் அதிகாரிகளின் இந்தச் செயல்பாட்டையும் ஒருதலைப்பட்சமானது என்று சாடினார்.

நேற்று இரவு திருநெல்வேலியில் தங்கிவிட்டு இன்று காலை கடையநல்லூர் நோக்கிப் பிரசாரத்திற்குப் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி அவர்களின் வாகனமும் இதேபோல் சோதனையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள சூழலில், முக்கியத் தலைவர்களின் வாகனங்கள் அடுத்தடுத்து சோதனையிடப்படுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றும், சந்தேகத்தின் அடிப்படையில் அனைத்து முக்கியத் தலைவர்களின் வாகனங்களும் சோதனையிடப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாற்று நாம் தமிழர்! திருத்தணியில் சீமான் அதிரடி பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share