உங்ககிட்ட கத்தி கத்தி சாகுறதுக்கு ஒரேடியா போயிடலாம்..! பரப்புரையில் சீமான் ஆதங்கம்..!!
நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையும் மேற்கொண்ட போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி போடுகிறது. 117 ஆண்கள், 117 பெண்கள் என வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
சீமான் காரைக்குடியில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருக்கிறார். தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் சீமான் திமுக ஆட்சியின் அவலங்கள் என்று கூறி பல்வேறு மக்கள் பிரச்சனைகளை எடுத்து கூறி வருகிறார். மக்களுக்காகவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் களத்தில் நிற்பது நாம் தமிழர் கட்சி என்றும் தங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து சீமான் வலியுறுத்தி வருகிறார்.
தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெறாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததையும் சீமான் அவ்வப்போது சுட்டிக்காட்டி பேசி வருகிறார். இந்த நிலையில், நாமக்கல்லில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ஜனநாயக துரோகம் செய்த ஜனநாயகன்... விஜயை வெளுத்து வாங்கிய சீமான்...!
அப்போது விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உங்களிடம் கத்தி கத்தி சாகுவதற்கு பதிலாக ஒரேடியாக செத்து விடலாம் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஒரு முறையாவது தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற சீமான் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் சமீப நாட்களாக விரக்தி உச்சத்திற்கே சென்று பேசி வருகிறார்.
இதையும் படிங்க: ”அவரு ஜெயிச்சி ஆட்சிக்கு வரப்போறது கிடையாது”... சீமானை எகிறி அடித்த செங்கோட்டையன்... நாதக டோட்டல் டெமேஜ்...!