10 வருஷமா கத்தி கத்தி சாவுறோம்.. பரப்புரையில் சீமான் குமுறல்..!
நாகையில் நடந்த பிரச்சாரத்தில் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நாகை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சா.பாத்திமா பர்கானா ஆவார். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் முழு 234 தொகுதி வேட்பாளர் பட்டியலை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாட்டில்' அறிவித்தபோது, நாகப்பட்டினம் தொகுதிக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் 117 என்ற எண்ணிக்கையில் ஆண்-பெண் வேட்பாளர்கள் சம எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளனர். மேலும் அனைத்து வேட்பாளர்களும் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களாக இருப்பது கட்சியின் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. பாத்திமா பர்கானா, நாகப்பட்டினம் தொகுதியின் மக்களுக்கு சேவை செய்யும் விருப்பத்துடன் களமிறங்கியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஓஹோ... அப்படியே பிடல் காஸ்ட்ரோ மாதிரி பேசியிருப்பாரா? ... விஜயை பங்கமாய் கலாய்த்த சீமான்...!
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் நடத்தி வருகிறார். நாகையில் பரப்புரை நடத்திய சீமான், “10 ஆண்டுகளாக கத்தி கத்தி சாவுறோம்” என்று தெரிவித்தார். ஒருவர் கூட நம்பவில்லை என்றால் என்ன சொல்லி புரியவைப்பது என்றும் சீமான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் .
இதையும் படிங்க: விஜய் நேரா எதுக்கு என் தொகுதியில பரப்புரைக்கு வரணும்..? சீமான் கேள்வி..!