×
 

குற்ற சமூகமாக மாறிவிட்டோம்... யாருக்கும் பாதுகாப்பில்ல... சீமான் ஆதங்கம்..!!

திருச்சி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

தமிழகத்தில் நடக்கும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாணவி கொலை, நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு, கண்மூடித்தனமான வெறியாட்டம், நாமக்கல்லில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை, மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம், சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் பல்வேறு இடத்திலும் எட்டி உதைத்த சம்பவம், கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஆறு வயது குழந்தைக்கும் பாதுகாப்பில்லை அறுபது வயது மூதாட்டிக்கும் பாதுகாப்பில்லை என சீமான் தெரிவித்துள்ளார். இந்த சமுதாயமே குற்ற சமுதாயமாக மாறிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதையில் தான் உள்ளனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!

ஆட்சியாளர்கள் மட்டும் பொறுப்பல்லை என்றும் ஆட்சியைத் தேர்வு செய்த மக்களும் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விஜய் பாஜக கூட்டணிக்கு செல்வதாக கூறப்படுவது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அந்த கேள்விக்கு பதில் அளிக்க சீமான் மறுத்துவிட்டார். ஒருமுறையாவது விஜய் இடம் என்னை பற்றி கேட்டு இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: செம்ம ட்விஸ்ட்... அதிமுகவில் இணைந்த காளியம்மாள்... அரசியல் வட்டாரத்தில் ஷாக்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share