×
 

வரலாற்று திரிபு திட்டமிட்ட சதி... அருண்மொழிச் சோழன் பிறந்தநாளே சதய விழா..! தமிழக அரசை வலியுறுத்திய சீமான்...!

அருண்மொழிச் சோழன் பிறந்தநாளையே சதய விழாவாக கணக்கிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஆண்டையே சதய விழா ஆண்டாக கணக்கிடாமல் பதவியேற்ற ஆண்டினை கணக்கிட்டு கொண்டாடி வருவது வரலாற்றுப்பிழை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசே அத்தவறை தொடர்ச்சியாக செய்து வருவது மக்களிடம் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தவே வழிவகுக்கிறது என்றார்.

ஏற்கனவே தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தமிழின வரலாற்று பெருமைகள் பலவற்றில் இரண்டு தரவுகள் கூறப்பட்டு, இரண்டில் எதனை கடைப்பிடிப்பது என்ற குழப்பம் இன்றுவரை நீடிக்கின்றது என்றும் அதே போன்று தமிழ்நாடு தனிப்பெரும் நிலப்பரப்பாக உருப்பெற்ற நவம்பர் முதல் நாளினை தமிழ்நாடு நாள் என கொண்டாடுவதை மாற்றி, ஜூலை 18ஐ தமிழ்நாடு நாள் என கொண்டாடுமாறு தவறாகத் திணித்துள்ளது திமுக அரசு என்றும் கூறினார்.

தமிழர் பெருமை கொள்ளும் அடையாளங்கள் ஒவ்வொரு ஒவ்வொன்றிலும் இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகள் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறதோ என்ற ஐயமும் எழுவதாக கூறிய சீமான், தமிழினத்திற்கு பின்னந்தோன்றிய பல இனங்களும், வரலாற்று தகவல்கள் ஏதும் சரிவர கிடைக்கப்பெறாத இனங்களும்கூட தங்கள் இனத்தின் பெருமையை எவ்வித குழப்பமும் இன்றி தெள்ளத்தெளிவாக கொண்டாடி வரும் நிலையில், தமிழினத்தில் மட்டுமே காணப்படும் இத்தகு குழப்பநிலை மிகுந்த மன வருத்ததை தருகிறது என்றார்.

இதையும் படிங்க: நாதகவிற்கு திருப்பம் தருமா திருச்சி?... பிப்ரவரி 7ம் தேதி அதிரடியாய் களமிறங்கும் சீமான்...!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் என்கின்ற இராஜராஜ சோழரின் பிறந்த ஆண்டை கி.பி.947 என உறுதிப்படுத்தியுள்ளது. அதே போன்று தொல்லியல் துறை பரிந்துரை செய்த இராசராசன் துணுக்குகள் நூறு மற்றும் Indian Council of Historical Research பதிப்பகத்தில் வெளிவந்த நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் எனும் வரலாற்று நூலிலும் மாமன்னர் அருண்மொழிச் சோழன் அரியணை ஏறிய நாள் 25 ஜூன் 985 என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆகவே, அருண்மொழிச்சோழன் பிறந்த ஆண்டு முதலே சதய விழாவினை கணக்கிட்டு அறிவித்து, அதனையே ஆண்டுதோறும் அனைவரும் கொண்டாடிட தமிழ்நாடு அரசு ஆவன செய்திட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: விஜயை அரெஸ்ட் பண்ணாததுக்கு காரணமே இதுதான்! ஆதவ் எப்படி தப்பிச்சாரு? சீமான் பரபரப்பு பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share