×
 
☰

தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

ஞானேஷ் குமார் பிரச்சனையை சுட்டிக்காட்டி அவர் தலைமையில் நடந்த தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை காக்க தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது.

அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா, பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா, தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா என்ற ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று சீமான் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது என்றார் அவர். சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கின்றன என்று சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்!

வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார் சீமான். அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் இப்போது துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா என்றும் வினவினார்.

 

இதையும் படிங்க: தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share