×
 

நல்லா நடத்துனிங்க நிகழ்ச்சி... அம்புட்டும் விளம்பரம்... சீமான் சரமாரி விளாசல்...!

தமிழக அரசு சார்பில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை சீமான் விமர்சித்து பேசினார்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் கருப் பொருளில் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்தனர். 2025-26 கல்வி ஆண்டிற்கான புதுமைப் பெண் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் தொடக்க விழா அப்போது நடந்தது. கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இந்த விழாவானது 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சீமானுக்கு அவ்வளவுதான் லிமிட்... நடவடிக்கை எடுங்க! தவெகவினர் போலீசில் புகார்

இந்த நிலையில், சென்னையில் நேற்று அரசு நடத்திய விழா கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை என்றும் சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் இருந்தது எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார். தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல என்றும் விளம்பர மாடல் அரசு எனவும் சீமான் விமர்சனம் செய்தார். மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துவதாகவும் கூறினார்.

கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். தாய் மொழியான தமிழ்த்தேர்வு எழுதுவதற்கு 60,000 பேர் வராத அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்வதாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: நடிகன் நாடாள துடிக்கிறான்... விஜய் மீது சீமான் மறைமுக தாக்கு! கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share