காதலை கொன்னு புதச்சிடாதீங்க! ஆணவ படுகொலையை சுட்டிக்காட்டி சீமான் ஆதங்கம்..!
எதன் பொருட்டும் காதல் என்பது கொலை செய்யப்படுவதை ஏற்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் கவின்குமார் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாற்று சாதிப் பெண்ணை காதலித்ததன் காரணமாக அந்த பெண்ணின் சகோதரர் நன்கு படித்த, சம்பாதிக்கும் ஒரு இளைஞரை, எதையுமே பொருட்படுத்தாமல் வெட்டி படுகொலை செய்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
ஆணவப் படுகொலைகளை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என்றும் கூறி வருகின்றன. தாய் தந்தை மீதான அன்பின் காரணமாக ஆணவ படுகொலை செய்துவிட்டார் சுர்ஜித் என்ற கருத்து பரவி வரும் நிலையில், அது அன்பு என்றால் இதுவும் அன்பு தான் என தெரியவில்லையா என சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த உலகத்தில் உள்ள கடைசி புனிதம் என்றால் அன்பு தான் அதையும் கொன்று விட்டு என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியையும் முன் வைத்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். 2024 ஆம் ஆண்டு சாதி கட்சிகளை இணைத்து பாஜக கூட்டணி அமைப்பதாக சீமான் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்று இருந்ததாக கூறினார். எல்லா சாதி கட்சிகளையும் இணைத்து ஒரு மத கட்சி தலைமை வகித்தது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விலைமதிப்பில்லா உயிர்களை காக்க மனசு வரலையா? கடல் அரிப்பு நிகழ்வை சுட்டிக்காட்டி சீமான் விளாசல்
நாட்டில் அமைப்பு தவறாக உள்ளது என்றும் காதல் குற்றம் என்று வெட்டுவதாகவும் கூறினார். அன்பு ஒன்றைத் தவிர இந்த உலகில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய சீமான், அன்பை யாராவது கொலை செய்வார்களா என்றும் தாய், தந்தைக்காக கொலை செய்தால் கூட அந்த அன்பு தான் இந்த அன்பு என்று தெரியாதா என கேட்டார்.
எதன் பொருட்டும் காதல் என்பது கொலை செய்யப்படுவதை ஏற்க முடியாது என்றும் இந்த உலகத்தில் கடைசியாக இருக்கும் ஒரே ஒரு புனிதம் அன்பு தான் அதையும் கொன்றுவிட்டு என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டார்.
இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்த சீமான்... பின்னணி குறித்து வெளியான 2 பரபரப்பு காரணங்கள்...!