×
 

கச்சத்தீவு கேடுகெட்ட நாடகம்… முதல்வரா போஸ்ட் மாஸ்டரா? பூந்து விளாசிய சீமான்…!

கச்சத்தீவு விவகாரம் குறித்து முதல்வர் கடிதம் எழுதியது தொடர்பாக சீமான் விமர்சித்தார்.

கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட காலமாகவே உணர்ச்சிமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, 1974-ம் ஆண்டு இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும், தீவை மீட்கவும் வேண்டுமென அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த விவகாரம் தமிழக அரசியல் மேடைகளில் மட்டுமல்லாமல், இந்திய நாடாளுமன்றத்திலும், பொதுத் தேர்தல் காலங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிற கட்சிகள், கச்சத்தீவை மீட்பது மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை பிரதமர் இந்தியா வந்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். கூட்டு பணிக்குழுவை மீண்டும் புதுப்பிக்க இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறு தெரிவித்திருந்தார். கச்சத்தீவு மீட்பு குறித்து முதலமைச்சர் கடிதம் எழுதிய தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பப்பட்டது. கச்சத்தீவு என்பது கேடுகெட்ட நாடகம் என்று தெரிவித்தார். டெக்னாலஜி வளர்ந்திருக்கும் சூழலில் கடிதம் எழுதிவிட்டேன் நான் என்ன செய்வது என கேட்டால் முறையா என்று கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் ஐயா... திராவிடம்னா என்ன? முதல்வருக்கு சீமான் சரமாரி கேள்வி...!

கச்சத்தீவை கொடுக்கும்போது உங்கள் ஆட்சிதானே இருந்தது என்றும் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். ஓட்டுக்காக மட்டுமே தங்களை வைத்திருப்பதாகவும் தங்களை ஒரு உயிராக மதிப்பதில்லை என்றும் சீமான் தெரிவித்தார். ஸ்டாலின் தமிழ்நாட்டு முதலமைச்சரா அல்லது போஸ்ட் மாஸ்டரா என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ரூ.10 லட்ச தரீங்களே? மின்னல் தாக்கி பலியான பெண்களுக்கு நிதி வழங்க சீமான் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share