×
 

காமெடி பண்ணாதீங்கப்பா... பாஜகவை திமுக எதிர்க்குதா? விளாசிய சீமான்..!

பாஜகவை எந்த வகையில் திமுக எதிர்க்கிறது என சீமான் கேள்வி எழுப்பினார்.

திமுகவின் அடிப்படைக் கருத்தியல் திராவிட இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது சமூக நீதி, மதச்சார்பின்மை, பகுத்தறிவு, மற்றும் வட இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது. மறுபுறம், BJP இந்துத்துவம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இது பெரும்பாலும் இந்தி மற்றும் வட இந்திய கலாச்சாரத்தை முன்னிறுத்துவதாக கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கவில்லை எனக் கூறி குற்றம் சாட்டி வருகிறது திமுக. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தை பாஜக முற்றாக புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், பாஜகவை எந்த வகையில் திமுக எதிர்கிறது என்று கேள்வியை சீமான் முன் வைத்துள்ளார். 

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்வேறு மக்கள் விரோத திட்டங்களுக்கு திமுக அனுமதி அளித்திருப்பதாக கூறினார். மீத்தேன் எடுத்த இடத்தில் மீண்டும் மக்களை குடியேற்ற முடியாது., அப்போது சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளாக்கப்படுவார்கள் என்றார். மக்கள் நிலமற்ற அடிமைகளாக மாற்றப்படுவார்கள்., ஆனால் அதைப்பற்றி இந்திய கட்சிகளுக்கு அக்கறை இருக்கிறதா அல்லது திராவிட கட்சிகள் எதற்காக போராடுமா என கேள்வி எழுப்பினார்.

மீத்தேன் போன்ற திட்டங்களால் நிலத்தை சுரண்டி வளத்தை சுரண்ட அனுமதித்தவர்கள் யார், எல்லா இடங்களிலும் அணு உலை திருப்பி அனுப்பிய போது, எங்கள் நிலத்தில் அணு உலையை நிறுவ அனுமதி கொடுத்தது யார், பரந்தூர் விமான நிலையத்தை கட்டியே தீர்க்க வேண்டும் என்று துடிப்பது யார் என சீமான் கேள்வி எழுப்பினார். பாஜகவை எதிர்ப்பது எல்லாம் நாடகம் தான் என்றும் கூறிய அவர், ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது நடக்காத ஆர்எஸ்எஸ் பேரணி திமுக ஆட்சியில் நடக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவுடன் கூட்டணி.. தீமையால் தீமை அழியுமா? திட்டவட்டமாக மறுத்த சீமான்..!

மக்களின் உரிமைகளுக்காக போராட கூட அனுமதி மறுக்கும் திராவிட மாடல் அரசு, ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தடையின்றி அனுமதி வழங்குவதாக குற்றம் சாட்டினார். மேலும், வலிமைமிக்க காவல்துறையை வைத்துள்ள நாம், சிபிஐ விசாரணையை கேட்கும் போது நம்மிடம் இருக்கும் காவல்துறையை விட மத்திய ஆட்சியாளர்களிடம் இருக்கும் சிபிஐ சிறப்பாக விசாரிக்கும், நீதியை நிலைநாட்டும் என்பதை சொல்ல வருவதாக இருப்பதாகவும், எந்த விவகாரத்தில் பாஜகவை திமுக எதிர்கிறது என்றும் கேட்டார்.

இதையும் படிங்க: #BREAKING: நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி! சீமான் திட்டவட்டம்.. இபிஎஸ் அழைப்பு நிராகரிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share