மூக்குத்தியை கழற்றி தேர்வு எழுத வைக்கிறீர்களே., பயங்கரவாதிக்கு உடனே பதிலடி கொடுக்க தெரியாதா? சீமான் காட்டம்..!
இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றது ஏன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் எதற்காக இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றார் என கேள்வி எழுப்பினார்.
மூக்குத்தியை கழற்றி மாணவர்களை தேர்வு எழுத வைக்கிறீர்கள்., ஆனால் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி மீது ஏன் பதில் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். உடனே பதிலடி கொடுக்காமல் 10 நாட்கள் கழித்து எதற்காக போர் தொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய சீமான், ஏற்கனவே புல்வாமா ஒரு படிப்பினை அல்லவா எனவும் ராணுவ வீரர்களையே பாதுகாக்க முடியவில்லை என்றும் இது போல அல்லது அக்கப்போரா என்று பேசினார்.
இதையும் படிங்க: ஆம்பளையா நீ, அன்னைக்கு கதறிக்கிட்டு ஓடுனியே எதுக்கு? - சீமானை டாரு டாராக கிழித்த விஜயலட்சுமி...!
இந்தியா பாகிஸ்தான் போரில் என்ன நியாயம் இருக்கிறது., துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் யாராவது கொல்லப்பட்டார்களா., என்று சீமான் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: ED வந்தால் ஓடிப் போய் மோடியை பார்க்கிறார் ஸ்டாலின்... சீமான் செம்ம கலாய்!