×
 

சொல்லுங்கய்யா... எங்கள இப்படி பாடா படுத்துறாங்க! சீமானிடம் கதறிய தூய்மை பணியாளர்கள்..!

வேளச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை சீமான் சந்திக்க சென்றபோது போலீசார் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

பணி நிரந்தரம், தனியார் மையமாக்குதலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரசு தரப்பில் எட்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேளச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது சீமானை சந்திக்க விடாமல் தூய்மை பணியாளர்களை போலீசார் வேகமாக அனுப்பி வைத்ததாக புகார் எழுந்தது.

இதையும் படிங்க: #BREAKING: களத்தில் சீமான்… போராடிவரும் தூய்மை பணியாளர்களுக்கு நேரில் சென்று ஆதரவு

தூய்மை பணியாளர்கள் வேனில் ஏற மறுத்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் மற்றும் சீமான் தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சீமானை சந்தித்து பேசியது பணியாளர்கள், சொல்லுங்கய்யா., கொரோனா காலத்தில் எல்லாம் நாங்கள் வேலை செய்தோம்… இப்படி பாடா படுத்துகிறார்கள் என கதறி அழுதனர்.

அதிகாரிகள் இப்படி செய்வது சரியா என்றும் எங்களுக்கு நியாயம் கிடைக்காதா எனவும் முறையிட்டனர். எங்களை சாவடிக்கிறார்கள் என்றும் பிள்ளைகளை எல்லாம் விட்டு நீதிக்காக போராடுகிறோம் எங்களுக்கு நியாயமே கிடைக்காதா எனவும் கதறி அழுதனர். 

இதையும் படிங்க: போராடும் தூய்மை பணியாளர்கள்.. செவி சாய்க்காத அரசு! நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share