×
 

எழில்வனத்தை நாசமாக்காதீங்க! அங்க ஆபீஸ் வெக்குறது அறிவில்லாத செயல்.. சீமான் காட்டம்..!

ஶ்ரீபெரும்புதூர் எழில்வனத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

எழில் வனத்தின் தோற்றம், தமிழ்நாடு அரசின் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. இந்த முயற்சி, நகரங்களில் குறைந்து வரும் பசுமைக் காற்றையும், மரங்களின் எண்ணிக்கையையும் மீட்டெடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. திருப்பெரும்புதூர், தொழிற்சாலைகளின் மையமாகவும், பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இடமாகவும் திகழ்கிறது. ஆனால், இதே தொழில்மயமாக்கல் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், பசுமை இழப்பையும் ஏற்படுத்தியது. இதனைச் சரிசெய்யும் வகையில், எழில் வனம் ஒரு முக்கியமான படியாக அமைந்துள்ளது.

அரசுக்கு சொந்தமான இந்த எழில்வனம் 5000க்கும் மேற்பட்ட மரங்கள், செடிகள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. இந்தக் காடு பல ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் மற்றும் அரண் என்கிற தன்னார்வலர் அமைப்பின் கடின உழைப்பின் விளைவாக வளர்க்கப்பட்டது. இந்த இடத்தினை 2021ஆம் ஆண்டிலேயே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க ஒதுக்கியபோது எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், அரசின் புறம்போக்கு நிலங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில் மரங்கள் பெருமளவில் வளர்ந்த பகுதியைத் தேர்ந்தெடுத்து அலுவலகம் அமைப்பது அறிவற்ற செயல் என சீமான் தெரிவித்துள்ளார் .

பொதுமக்களின் நலனை மதிக்காமலும், சூழலியல் பாதுகாப்பு குறித்தப் புரிதல் இல்லாமலும் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். என்றும் எந்தவொரு முன்னெடுப்பு திட்டமிடப்படும்போதும் சூழலியல் பார்வையில் அதன் நன்மை தீமைகளை அரசு ஆய்வு செய்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: புலி வேட்டைக்கு போகையில குறுக்க அணில் ஓடுது... TVK-வை கலாய்த்து தள்ளிய சீமான்..!

எனவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க இந்த இடத்தை ஒதுக்கிய ஆணையைத் திரும்பப் பெற்று, எழில்வனத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றியமைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இடைக்காலத்தில் கட்டுமானப் பணி எனும் பெயரில் எந்தவொரு மரத்தையும் எழில் வனத்துக்குள் வெட்டக் கூடாது என்றும் சீமான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சீமானுக்கு என்ன ஆச்சு??... திடீர் ஆவேசத்தால் மொத்தமும் போச்சு... பகீர் கிளப்பும் வீடியோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share