×
 

வெளிநாட்டில் பயின்ற மருத்துவப் பட்டதாரிகள்... கோரிக்கையை கேளுங்க... ஆதரவு குரல் கொடுத்த சீமான்..!

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழ்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழ் மாணவர்களுக்கு உரிய அளவில் பயிற்சி மருத்துவ இடங்களை ஒதுக்காததோடு, தகுதி சான்றிதழ் வழங்குவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் ஒன்றிய மாநில அரசுகளின் செயல் வன்மையான கண்டனதுக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இந்தியாவில் மருத்துவம் பயில கட்டாய நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிலிருந்து பிலிப்பைன்ஸ், ரஷ்யா, கிர்கிஸ்தான், சீனா, உக்ரைன், ஆர்மீனியா, ஜோர்ஜியா, உஸ்பெகிஸ்தான், மொரிஷியஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது என்று கூறினார். ஆனால், வெளிநாட்டில் மருத்துவம் முடித்த தமிழ்நாட்டு பட்டதாரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றபோதும் பல்வேறு இன்னல்களை தற்போது சந்திந்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என கூறினார்.

ஆகவே, இந்திய ஒன்றிய மருத்துவ ஆணையமும், தமிழ்நாடு மருத்துவ கழகமும், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி வழங்கிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகள் பயிற்சி மருத்துவம் பெற விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மீண்டும் பயிற்சி மருத்துவம் செய்ய உரிய அனுமதி வழங்கிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பரிதவிக்கும் செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள்... பச்சை துரோகம் செய்யாதீங்க... குரல் கொடுத்த சீமான்...!

 வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு தற்காலிக தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் தமிழ்நாடு மருத்துவக் கழகம் தேவையற்ற காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், இந்திய மருத்துவ ஆணைய விதிகளுக்கு எதிராக, தமிழ்நாட்டில் மட்டும் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களில் பலருக்கு, 2 அல்லது 3 ஆண்டுகள் மருத்துவராக பயிற்சி பெற வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கழக உத்தரவை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சீமான் முன் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 2026 தேர்தல் பொங்கல்… கடந்த முறை ரூ. 3000 ஏன் கொடுக்கல? ஊழல் குற்றச்சாட்டு நல்ல வேடிக்கை… விளாசிய சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share