×
 

“சேகர் பாபுவை சந்திக்கவில்லை... பாஜகவை கண்டு கொள்ளவில்லை” - படு ஓபனாக பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

திமுகவில் இணைவது தொடர்பாக சேகர்பாபுவை தான் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனையடுத்து செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாகவும், அவருக்கு மிக முக்கியமான பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சி.டி நிர்மல் குமார் ஆகியோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் பதிலளிக்காமல் நழுவிச்சென்றனர்.

அதேபோல் செங்கோட்டையனிடமும் இந்த கேள்வி முன்வைக்கப்பட்ட போது அவரும் பதிலளிக்காமல் மௌனம் காத்தார். இதனால் மௌனம் சம்மதம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியது. இதனிடையே, நேற்று மாலை திடீரென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறநிலையத்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. 

குறிப்பாக இன்று உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, செங்கோட்டையன் திமுகவில் இணையக்கூடும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தையில் தான் அமைச்சர் சேகர்பாபு இறங்கியுள்ளதாகவு கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், சேகர் பாபுவும் செங்கோட்டையனும் ஒரு காலத்தில் அதிமுகவில் ஒன்றாக பயணித்தவர்கள். அந்த நட்பின் அடிப்படையிலும் இருவரும் சந்தித்து பேசியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: வைரல் வீடியோ....!! அசிங்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா..! - பிரஸ் மீட்டில் தவெக துண்டை அணிய மறுத்த செங்கோட்டையன்...!

இதனிடையே, தவெக-வில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், த.வெ.க.வில் நான் இணைந்ததற்கு காரணங்கள் உண்டு. தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் வேறு வேறு அல்ல; ஒன்றாக இணைந்து பயணிக்கிறார்கள். பள்ளிக்குழந்தைகள் தங்களது பெற்றோரிடம், "அப்பா, அம்மா, விஜய்க்கு ஓட்டு அளியுங்கள்" என்று கூறும் நிலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளது தூய்மையான ஆட்சி நடத்த ஒருவர் தேவை என்பது மக்கள் மனதில் தோன்றியுள்ளது இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாவுவை நான் சந்திக்கவே இல்லை, தி.மு.க-வில இருந்தோ, பாஜக-வில் இருந்தோ யாரும் என்னை அணுகவில்லை. தினம் ஒரு கட்சிக்கு சென்றவன் நான் அல்ல, புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர் இயக்கத்தை ஒன்றாக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டதே தவிர செயல்படுத்த முடியவில்லை.* என்று செங்கோட்டையன் தெரிவித்தார்

இதையும் படிங்க: வரலாறு திரும்புகிறது... செங்கோட்டையனை புகழ்ந்து தள்ளிய தவெக நிர்வாகிகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share