×
 

தேர்தல் நாள் மோதல் எதிரொலி..! சேகர்பாபு மீது கொலை முயற்சி வழக்கு..! போலீஸ் ஆக்ஷன்..!

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 அன்று சென்னை துறைமுகம் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சினோரா பி.எஸ். அசோக் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அங்கப்ப நாயக்கன் தெரு வாக்குச்சாவடி அருகே மாலை நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெக தொண்டர்களைத் தாக்கியதாகவும், வழக்கறிஞர் விஜயகுமார் உள்பட சிலரை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. தவெக வேட்பாளர் அசோக், சேகர்பாபு தரப்பினரால் தாக்கப்பட்டதாகவும், தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். 

சம்பவத்திற்குப் பிறகு தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமயோசிதமாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். சினோரா அசோக், இந்தச் சம்பவத்தால் தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை நாளில் மீண்டும் தாக்குதல் நடைபெறலாம் என்றும் அஞ்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இதையும் படிங்க: “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - வார்த்தையை விட்டு வசமாக சிக்கிய சேகர் பாபு... தவெக செய்த தரமான சம்பவம்...!

இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக வேட்பாளரை தாக்கிய புகாரில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாக்குப்பதிவின்போது தவெக வேட்பாளர் அசோக் சினோரா, வழக்கறிஞர் விஜயகுமாரை தாக்கியதாக கூறி வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். 

இதையும் படிங்க: மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share