×
 

திமுக ஒரு தீய சக்தி... விஜய் விமர்சனத்திற்கு சேகர்பாபு பளீச் பதில்..!!

திமுகவை தீய சக்தி என விஜய் விமர்சனம் செய்த நிலையில் சேகர் பாபு பதிலடி கொடுத்தார்.

தஞ்சையில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது திமுகவை சரமாரியாக சாடினார்.தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் மட்டும் தான் இருக்கிறோம் என்பதற்காக தான், தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என்று கூறியதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் டெல்லி டெல்லி என்று கூறுவதாகவும், ரெய்டு வந்தால் திமுக டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பதும் இன்று நடந்து கொள்கிறார்கள் என கூறி உள்ளார். ஓம் சக்தி., பராசக்தி., திமுக ஒரு தீய சக்தி என்ற இளைஞர்கள் கூறி வருவதாகவும், கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டை தொட்டு பார்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

எனக்கும் மக்களுக்கும் இடையில் யாராலும் உள்நுழைய முடியாது என்று கூறினார். அனைத்து அணிகளையும் தமிழக வெற்றிக் கழகம் அடித்து நொறுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இதை எலக்சன் என்றும் தனக்கும் தன்னை நேசிப்பவர்களுக்கும் இது எமோஷன் எனவும் தெரிவித்தார். திமுக ஒரு தீய சக்தி என விஜய் விமர்சனம் செய்த நிலையில், பன்ச் டயலாக்கிற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது நாலு கால் பாய்ச்சல் இல்லை திமுக எட்டு கால் பாய்ச்சலில் இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் எட்டி கூட பிடிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் அண்ணாமலைக்கும் தமிழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பதவி சுகத்தை அனுபவித்தவர் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: செம டிவிஸ்ட்... திமுகவில் ஐக்கியம்..!! ஒரே காரில் OPS, சேகர்பாபு பயணம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share