×
 

பூங்கா அமைக்க எதிர்ப்பு... செல்லூர் ராஜூவை சூழ்ந்த பெண்கள்... மதுரையில் சர்ச்சை...!

பூங்கா அமைக்கும் பணியை எதிர்த்த செல்லூர் ராஜீவுக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மதுரை மாநகர் 70 வது வார்டு வேல்முருகன் நகர் பகுதியில் உள்ள தாமிரபரணி தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான10 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை வேல்முருகன் நகர் துரைசாமி நகர் தாமிரபரணி தெரு, நேரு நகர் மக்கள் பொதுபாதையாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த இடத்தை 70 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரான அமுதா, அந்தப் பத்து சென்ட் இடத்தில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம், கணினி வரி வசூல் மையம், சிறுவர் பூங்கா ஆகியவை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த சிலர் பூங்கா ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி தரப்பில் அந்த இடத்தில் பூங்கா கட்டுவதற்கு அனுமதி வழங்கி 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் வேல்முருகன் நகரில் உள்ள குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் அந்த இடத்தில் பூங்கா கட்டக்கூடாது என்றும் தங்களுக்கு நடைபாதையாக வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் நேரு நகர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் பூங்கா கட்டுவதற்கான வேலையை துவங்கி உள்ளது.

இதையும் படிங்க: “தவெக கொடியை தூக்கி காட்டும் அளவுக்கு அதிமுககாரன் இழி பிறவி இல்ல” - செல்லூர் ராஜூ ஆவேசம்...!

இந்நிலையில் வேல்முருகன் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினரை அழைத்துக் கொண்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பூங்கா கட்டும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் செல்லூர் ராஜு முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பூங்கா கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த செல்லூர் ராஜூவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அதிமுகவினரோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் செல்லூர் ராஜு அங்கிருந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு மக்களுக்காகத்தான் திட்டங்கள், ஆனால் திட்டத்திற்காக மக்களை மாமன்ற உறுப்பினர் அவதிக்குள்ளாக்கி வருகிறார் என்றும் இதுதான் திமுகவின் அராஜகம்., ஏற்கனவே மாநகராட்சி மிகப்பெரிய ஊழலில் சிக்கி உள்ளது என குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இதையும் படிங்க: அட போங்கப்பா... ஸ்டாலின் ஆட்சியில் அவரு பெரியப்பாவுக்கே பாதுகாப்பு இல்லையா? - கொந்தளித்த செல்லூர் ராஜூ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share