×
 

முத்துராமலிங்க தேவருடன் அண்ணாமலையை ஒப்பிட்ட செல்லூர் ராஜு.! கடும் எதிர்ப்பு..!!

அண்ணாமலையை முத்துராமலிங்க தேவருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஒப்பிட்டு பேசியதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

முத்துராமலிங்க தேவரின் மறு உருவம் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 2026-இல், அதிமுகவின் மதுரை மேற்கு தொகுதி வேட்பாளராக செல்லூர் ராஜு சோலை அழகுபுரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

அப்போது, பாஜகவின் தமிழக வளர்ச்சிக்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம் என்று புகழ்ந்து பேசிய அவர், “கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் அண்ணாமலை. மேலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் மறு உருவம் அண்ணாமலை” என்று கூறினார். இந்த பேச்சு உடனடியாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முத்துராமலிங்க தேவர் தென் தமிழகத்தின், குறிப்பாக தேவர் சமூகத்தின் மிக முக்கியமான தலைவராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் அறியப்படுபவர். அவரது பிறந்த நாள் (குருபூஜை) தமிழகத்தில் பெரும் அளவில் கொண்டாடப்படும் நிகழ்வு. செல்லூர் ராஜுவின் ஒப்பீடு அண்ணாமலையை தேவருடன் இணைத்து பாராட்டும் வகையில் இருந்தாலும், இது பல தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: குஷ்பூவுக்கு வந்த அதே கதி தான் விஜய்க்கும்... தவெகவுக்காக அதிமுக கூட்டணிக்குள் குண்டு வைத்த செல்லூர் ராஜூ...!

சிலர் இதை அரசியல் லாபத்துக்காக செய்யப்பட்ட முயற்சி என்று விமர்சித்தனர். அதிமுக - பாஜக இடையேயான உறவில் ஏற்கனவே இருந்த பதற்றத்தை இது மேலும் அதிகரித்தது. அண்ணாமலை புகழ்ந்து பேசுவதாக நினைத்து முத்துராமலிங்க தேவருடன் ஒப்பிட்டு பேசினார். முத்துராமலிங்க தேவருடன் ஒப்பிட்டு பேசியதற்கு செல்வராஜ்வுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: "உங்க பையன் துரைமுருகன்"..! 11 முறை ஜெயிச்ச பெருமை கிடைக்கும்..! காட்பாடியில் பரப்புரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share