அறைக்குள் அமர்ந்து அரசியல்..! என்னத்த சொல்ல? விஜயை விளாசிய செல்லூர் ராஜூ..!
அறைக்குள் அமர்ந்து அரசியல் பேசுபவர்களை என்னவென்று சொல்வது என விஜய் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் விவாதங்களையும் ஏற்படுத்திய ஒரு சோகமான நிகழ்வு. கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் கரூர் மாவட்டத்தில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பலியாகிய இந்த சம்பவம் மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
விஜய் அங்கிருந்து உடனடியாக சென்னை திரும்பியதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாக சந்திக்காமல் சென்றதும் ஆரம்பம் முதலே கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. சம்பவத்துக்குப் பிறகு ஒரு மாதத்துக்கும் மேலாக கழித்து, அக்டோபர் 2025 இறுதியில் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டுக்கு அழைத்து சந்தித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது விவாத பொருளாக மாறியது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்னைக்கு அழைத்து பேசுவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 5 அறிவிப்புகளால் ஆட்டம் கண்ட திமுக.. காப்பி அடிச்சோமா? செல்லூர் ராஜு பேட்டி..!
அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்பவரை என்னவென்று சொல்வது என்றும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் போல தோல்வியை கண்ட இயக்கம் வேறு எதுவும் கிடையாது என்று கூறினார். மேலும், தேர்தல் தோல்விகள் குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் பேசவே கூடாது என்று தெரிவித்த செல்லூர் ராஜு, முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை மதுரையில் முறையாக செயல்படுத்தவில்லை எனக்கு குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அது எப்படி முடியும்? ஜனநாயகனுக்கு மோடி அழுத்தம் தரல... வரிந்து கட்டி வந்த செல்லூர் ராஜு..!