×
 

வீரியமெடுக்கும் காவிரி நீர் பிரச்சனை..! பாத்துட்டு சும்மா இருக்காதீங்க... செல்வப் பெருந்தகை எச்சரிக்கை..!

காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது பேட்டியில், கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் குறைவாக உள்ளதாகவும், மாநிலத்தின் குடிநீர் தேவை உள்ளிட்ட சொந்தத் தேவைகளை முதன்மைப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் விளக்கினார். மேலும், நீர் வெளியீடு குறித்த இறுதி முடிவை காவிரி நீர் மேலாண்மை ஆணையமே எடுக்கும் எனவும், அதுவும் கர்நாடகாவின் நீர் இருப்பு மற்றும் குடிநீர் தேவையைப் பொறுத்தே இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் நீர் தேவையை புறக்கணிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் காவிரி நீர் தமிழக விவசாயத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஜூன்-ஜூலை மாதங்களில் சம்பா மற்றும் குருவை பயிர்களுக்கு நீர் தேவை அதிகம் உள்ள நேரத்தில் இந்த மறுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விவசாய சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை தனது கருத்தை பகிர்ந்து உள்ளார். காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களும் தெளிவாக உள்ள நிலையில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை காலதாமதமின்றி முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள், காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். குறுவை, சம்பா உள்ளிட்ட சாகுபடிகள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், தமிழகத்திற்குரிய நீர் உரிய நேரத்தில் கிடைக்காதது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கடுமையாகப் பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தவெக-வில் இணைவதில் குதிரை பேரம் இல்லை..' எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி ஓபன் டாக்!

எனவே, கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் முழுமையாக மதித்து, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை எந்தவித தாமதமும் இன்றி திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் மத்திய அரசும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: தவெக 'இண்டி' கூட்டணியில் இணையுமா 2026?: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share