×
 

நான் பேசுனது தப்பு இல்ல! தொண்டர்கள் எண்ணத்தை தான் பிரதிபலித்தேன்... செங்கோட்டையன் விளக்கம்

தொண்டர்களின் எண்ணத்தை தான் பிரதிபலித்ததாக செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போதும் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போதும் இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக தனது பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். 2016 க்கு பின் தேர்தல் களம் போராட்ட களமாக மாறிவிட்டது என்பதை நாம் அறிவோம் என்றார்.

அதிமுகவில் தொய்வு ஏற்பட்டதால் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிடம் கூறியதாகவும் அதனை ஏற்கும் நிலையில் அவர் இல்லை எனவும் தெரிவித்தார். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையன் சொன்னது 100% CORRECT! கிரீன் சிக்னல் காட்டிய ஓபிஎஸ்…

நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கே.ஏ. செங்கோட்டையன் பதிவிட்டுள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் வெற்றிகரமாக வழி நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று இன்னும் நூறாண்டுகள் தமிழக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற வகையில் பெரும்பான்மையான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து கழகம் ஒன்று பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை அறிந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தனக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றியை காணிக்கையாக்குவதாக செங்கோட்டையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசையா? செங்கோட்டையன் பரபரப்பு பிரஸ்மீட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share