#BREAKING: செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சி பதவியும் பறிப்பு… அதிரடி காட்டிய இபிஎஸ்
செங்கோட்டையன் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் ஏழு பேரின் கட்சி பொறுப்பையும் எடப்பாடி பழனிச்சாமி பறித்துள்ளார்.
அதிமுக தலைமை மீது அதீத அதிருப்தியில் செங்கோட்டையன் இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே, வெற்றி வாகை சூடுவதற்கு, நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் செங்கோட்டையம் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்து உள்ள நிலையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்றிலிருந்து அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறுப்பை தட்டிக் கழிப்பதில் ஸ்டாலின் தான் BEST...எடப்பாடி சரமாரி தாக்கு
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் குறிப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். செங்கோட்டையன் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து கே.எஸ் மோகன் குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நம்பியூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து சுப்ரமணியன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து சென்னை மணியை நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அதுமட்டுமல்லாது, கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து குறிஞ்சி நாதன் விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
அந்தியூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொறுப்பு இருக்கிறது தேவராஜ் நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, அத்தாணி பேரூராட்சி செயலாளர் பொறுப்பில் இருந்து ரமேஷும், துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மருதமுத்துவும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அறியாமையில் பேசுகிறார் விஜய்.. உடனடியாக ரியாக்ட் செய்த எடப்பாடி பழனிசாமி..!!