×
 

விஜய்க்கே தளபதியான செங்கோட்டையன்... தற்கொலைக்கு சமமான முடிவு... மாஜி அமைச்சர் எச்சரிக்கை...!

தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என முன்னால் அமைச்சர் செம்மலை தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி வந்தார். பத்து நாட்களுக்குள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். முதலில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சிப்பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்ததால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார்.

இருப்பினும் அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்று செங்கோட்டையன் கூறி வந்தார். செங்கோட்டையன் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. நேற்றைய தினம் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இன்று செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பனையூர் அலுவலகத்தில் விஜயை சந்தித்து தன்னை தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைத்துக் கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த உடனேயே செங்கோட்டையனுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கியுள்ளார்.

அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமமான முடிவு என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்தார். விஜய், செங்கோட்டையன் இருவரில் யார் யாருக்கு அரசியல் பாடம் எடுக்கப் போகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என செம்மலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையனுக்கு ‘தலைமை’ பொறுப்பு... தவெகவில் கால் வைத்ததுமே 2 அதிமுக்கிய பதவிகளை அள்ளிக்கொடுத்த விஜய்...!

எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை கண்களை இமைக்காப்பது போல் எடப்பாடி பழனிச்சாமி காத்து வருகிறார் எனவும் கூறினார். தலைமைக்கு சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும் என்றும் தெரிவித்தார். பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை என்றும் செங்கோட்டையன் சென்றதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் செம்மலை தெரிவித்தார். 

இதையும் படிங்க: அடேங்கப்பா...!! இது நம்ப லிஸ்டுலேயே இல்லையே... செங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த முக்கிய டாஸ்க்... திமுக, அதிமுக செம்ம ஷாக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share