×
 

சூடுபிடிக்கும் தேர்தல் வழக்கு..! அமைச்சர் செங்கோட்டையனுக்கு நோட்டீஸ்..! சென்னை ஹை கோர்ட் உத்தரவு..!!

அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான வடக்கில் பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் போட்டியிட்ட முன்னாள் அதிமுக தலைவரும், தற்போதைய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் வி.பி. பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோபிச்செட்டிபாளையம் தொகுதி செங்கோட்டையனின் பாரம்பரிய வலிமை மிக்க இடமாகக் கருதப்படுகிறது. பல தசாப்தங்களாக இங்கு தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த அவர், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் புதுமுகமான வி.பி. பிரபு இங்கு களமிறக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடிவுகளில் செங்கோட்டையன் வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றியை சவாலுக்கு உள்ளாக்கும் வகையில் பிரபு நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

வழக்கின் மையப்புள்ளி, செங்கோட்டையன் தாக்கல் செய்த பரிந்துரை ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட படிவம்-26 உறுதிமொழிப் பிரமாணப் பத்திரம் தொடர்பானது. மார்ச் 27, 2026 அன்று இந்த அஃபிடவிட்டை சான்றளித்த நோட்டரி பப்ளிக்கின் உரிமம் காலாவதியாகிவிட்டதாகவும், அந்த தேதியில் அவருக்கு செல்லுபடியான நோட்டரி சான்றிதழ் இல்லை என்றும் பிரபு குற்றம் சாட்டியுள்ளார். எனவே, அந்த அஃபிடவிட் செல்லாதது என்பதால், முழு பரிந்துரை செயல்முறையே செல்லாததாகிவிடும் என்றும், அதன் மூலம் தேர்தல் முடிவு செல்லாது என்றும் அவர் வாதிட்டுள்ளார். 

இதையும் படிங்க: தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

இந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share