×
 

கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர் தான் இபிஎஸ்… செங்கோட்டையன் கடும் விமர்சனம்…!

கொல்லைப்புறமாக முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமி என்று செங்கோட்டையன் விமர்சித்தார்.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எங்களைப் போன்றவர்கள் முன் மொழியவில்லை என்றால் ஈபிஎஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது என்று கூறினார். கடந்த 209 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

பிரிந்து சென்றவர்கள் இணைந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என அதிமுக நன்மைக்காக தான் பேசினேன் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒரு நாள் கூட சிபிஐ விசாரணைக்கு குரல் கொடுக்காதவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் நான் இந்த தொகுதியில் சிற்றரசரை போல வாழ்ந்ததாகவும் எதுவும் செய்யவில்லை என்று ஈபிஎஸ் பேசி இருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக அமர்த்தபட்டவர் ஓ. பன்னீர்செல்வம் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கொல்லைப்புறமாக முதலமைச்சராக ஆனவர் என்றும் தெரிவித்தார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கை வைத்து திமுகவின் பீ டீமாக இருப்பவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய செங்கோட்டையன், எல்லா பணத்தையும் தொகுதியில் கொட்டி விட்டீர்கள் என என்னிடம் கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செங்கோட்டையன் நீக்கத்திற்கு பிறகு இபிஎஸ் முக்கிய ஆலோசனை... கூடியது அதிமுக மா. செ. கூட்டம்...!

நாடாளுமன்ற தேர்தலில் பண செலவு செய்தால் போதும் என சீட்டு வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வரானதற்கு வழிவகை செய்த சசிகலாவையே கொச்சையாகப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார். ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பாஜகவிற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இபிஎஸ் பிரிவு உண்மையான அதிமுகவே இல்ல... குண்டை தூக்கி போட்ட செங்கோட்டையன்! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share